Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Director Arumugakumar-indiastarsnow.com

தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்!

Posted on July 3, 2020 By admin No Comments on தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்!

தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்!

விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படத்தையும் தற்போது இவர் தயாரித்து வருகிறார். மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட உள்ளடக்கம் மற்றும் இந்திய வணிகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினராக தற்போது இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்

இச் செய்தியை மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்ட இயக்குநர் ஆறுமுக குமார், “மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS) எனக்கு அளித்த இந்த கெளரவம் நான் சற்றும் எதிர்பாராதது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஓர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்ப்பட உலகம் எனக்கு பயனுள்ள பல அரிதான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. தமிழ்த் திரைப்பட உள்ளடக்கம் மற்றும் வணிகப் பிரிவின் Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS) நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதை எனக்குக் கிடைத்த பெரிய வரமாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பின் மூலம் நமது வணிக எல்லைகளை மேலும் உயர்த்தவும், இந்திய மலேஷிய பொழுது போக்கு வணிக மதிப்புகளை உயர்த்தவும் பாலமாக இருப்பேன்” என்றார் ஆறுமுக குமார்.Director Arumugakumar-indiastarsnow.com

Cinema News Tags:Director Arumugakumar-indiastarsnow.com, Press Release of Director Arumugakumar

Post navigation

Previous Post: Gorgeous Ashima Narwal photoshoot
Next Post: சென்னை பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

Related Posts

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு ! Cinema News
போலாமா ஊர்கோலம்' இசை வெளியீடு! போலாமா ஊர்கோலம்’ இசை வெளியீடு! Cinema News
AR Rahman’s new Tamil anthem ‘Moopilla Thamizhe Thaaye AR Rahman’s new Tamil anthem ‘Moopilla Thamizhe Thaaye Cinema News
SanamShetty in a recent photoshoot-indiastarsnow SanamShetty in a recent photoshoot Cinema News
The Warriorr' teaser தி வாரியர்’ படத்தின் முதல் டீசருடன், ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ள வருகிறார் உஸ்தாத் ராம் பொத்தினேனி ! Cinema News
சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’ சூர்யா கலந்துகொண்ட ‘சூரரைப்போற்று’ இந்தி பதிப்பின் தொடக்கவிழா Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme