தமிழகத்தில் கடந்த 25-ந்தேதியில் இருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இன்றும் 3,943 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில் 60 பேர் (16 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்) உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 50,074 பேர் குணமடைந்துள்ளனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 30,053 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதாகவும் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.