துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து 2,000 பேர் இந்தியா திரும்ப உதவி செய்துள்ள கேரள பெண் வழக்கறிஞருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
கேரளாவைச் சேர்ந்த ஷீலா தாமஸ் என்பவர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கொரோனா காரணமாக வேலையிழந்த 2,000 பேர் இந்தியா திரும்புவதற்கு உரிய ஆவணங்களை சேகரித்து அனுப்பும் பணியை இலவசமாக செய்து வருகிறார்.
பலர் காலாவதியான விசாவை வைத்துள்ளனர். சிலரது விசா நிறுவனங்களிடம் சிக்கியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை தீர்த்து ஊர் திரும்ப ஏற்பாடு செய்து வருகிறார். அத்துடன் தினமும் தன் வீட்டில் 300 பேருக்கு இலவச உணவு வழங்கி வருகிறார். ‘மக்களின் சேவை; மகேசன் சேவை’ என்கிறார் ஷீலா தாமஸ்.