Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Hyderabad-techie-kills-herself-family-shares-horrifying-indiastarsnow.co

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் தற்கொலை செய்து கொண்ட பெண் – அதிர்ச்சி சம்பவம்

Posted on June 28, 2020 By admin No Comments on தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் தற்கொலை செய்து கொண்ட பெண் – அதிர்ச்சி சம்பவம்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் உள்ள ரல்லாகுவா பகுதியை சேர்ந்த லாவண்யா லஹாரி. இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவருக்கு தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்து வரும் வெங்கடேஷ்வரளூ என்பவருக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.Hyderabad-techie-kills-herself-family-shares-horrifying-indiastarsnow.co

இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்ட லாவண்யா தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக பதிவிட்டிருந்தார்.

வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனது மகளை அவரது கணவர் தாக்கிய சிசிடிவி வீடியோவை லாவண்யாவின் பெற்றோர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் வெங்கடேஷ்வரளூ அவரது மனைவி லாவண்யாவை கடுமையாக தாக்குகிறார். அப்போது அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணி நாய் அந்த தாக்குதலை தடுக்க முயற்சி செய்கிறது.Hyderabad-techie-kills-herself-family-shares-horrifying-indiastarsnow.co

கணவன் மிகவும் கொடூரமாக தாக்கியதால் தனது வயிற்றிலை கையை வைத்தபடி அழுதுகொண்டே லாவண்யா செல்வது போன்ற அந்த சிசிடிடி கேமராவில் வீடியோ பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக லாவண்யாவின் கணவர் வெங்கடேஷ்வரளூவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட லாவண்யா தான் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில் தனது கணவர் வெங்கடேஷ்வரளூ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால் தன்னை உடல் மற்றும் மன ரீதியில் கொடுமைபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார் என ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். .

Genaral News Tags:Hyderabad-techie-kills-herself-family-shares-horrifying-indiastarsnow.co

Post navigation

Previous Post: சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Next Post: ஓடிடி-யில் வெளியாகும் காக்டெய்ல் மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டம்

Related Posts

Actor Rio Raj’s new movie launched with ritual ceremony Filmmaker Lokesh Kanagaraj’s Actor Rio Raj’s new movie launched with ritual ceremony Filmmaker Lokesh Kanagaraj’s Genaral News
மனிதனை முழுமையாக்குவது கல்வி மட்டுமே – கார்த்தி சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யா Genaral News
Prime Video hosts a grand premiere of its first Telugu Original Movie, Ammu in Hyderabad Genaral News
Kauvery Hospital Vadapalani installs AED at Sivan Park, KK Nagar Kauvery Hospital Vadapalani installs AED at Sivan Park, KK Nagar Genaral News
Yora Fitness Private Limited -indiastarsnow.com Yora Fitness Private Limited, the Master Franchise of Fitness Factory for South India first outlet inaugurated by Mr. Pedro Simão, Mr. Hugo Pedroso & Mr. Mohammed Shahul Hameed at KK Nagar. Cinema News
சமூக வலைதளங்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது சமூக வலைதளங்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme