Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு.

Posted on June 28, 2020 By admin No Comments on திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசின் அலட்சியமும், மிதமான செயல்பாடுகளுமே கொரோனா பரவ காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைச்சர்கள் சிலரும் அவ்வபோது பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசியுள்ளத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் ஊரடங்கில் வீட்டில் இருக்க மாட்டாமல் தவறான தகவல்களை தொடர்ந்து மக்களிடம் பரப்பி வருகிறார். மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகள் யாரும் ஸ்டாலினை போல செயல்படவில்லை.

மேலும், மக்களுக்கு தேவையான பொருட்களை திமுக விநியோகிக்க விரும்பினால் அரசு அதிகாரிகளிடம் வழங்கி அதை செய்திருக்கலாம். மு.க.ஸ்டாலின் தவறான வழிகாட்டுதல்களால் தமிழக அரசு ஒரு எம்.எல்.ஏவை இழந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு…

சட்டமன்றத்தில் மறைந்த அன்பு அண்ணனின் (ஜெ.அன்பழகன்) கேள்விகளுக்குப் பதிலளிக்க வக்கற்றவர்களாக எத்தனை முறை அவரை வெளியேற்றி, இடைநீக்கம் செய்து, அவைக் குறிப்பிலிருந்து நீக்கியிருப்பீர்கள்? ஆனால் இன்று, ‘நிவாரணம் வழங்கியதால் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை நாம் இழந்துள்ளோம்’ என்கிறீர்கள்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு. கழகம், தலைமையின் உண்மை விசுவாசியான அன்பு அண்ணன் அவர்களின் பெயரை நீங்கள் உச்சரிக்காதீர்கள். தவிர, வீட்டிலிருந்த உங்கள் அதிமுக எம்.எல்.ஏ பழனி, உங்கள் தனிச் செயலர் தாமோதரனுக்கு கொரோனா தொற்றியது எப்படி? அவர்கள் என்ன ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட பயனாளிகளா?

10ம் வகுப்பு தேர்வு ரத்து, ரூ.1000, ரேஷன் பொருள், நடமாடும் சோதனை நிலையம் என தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிக்கைகளே ஓரளவுக்கேனும் உங்களை செயல்பட வைக்கின்றன. தன் இருப்பைகாட்ட அறிக்கை விடவேண்டிய அவசியம் அவருக்கில்லை. ஏனெனில் அவர் உழைப்பை நம்புவர்; மற்றவரின் கால்களை அல்ல என பதிவிட்டுள்ளார்.

Political News Tags:தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசின் அலட்சியமும்

Post navigation

Previous Post: மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் – ராஜமௌலி வெளியிட்ட வீடியோ!
Next Post: இயக்குனர் ஹரி காவல்துறையை பெருமைப்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்!

Related Posts

அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!'- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!’- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை Genaral News
காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி காமராஜர் – கருணாநிதி ரேஞ்சுக்கு விஜய்க்கு பில்ட் அப் கொடுக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி Political News
pmk-anbhumani-www.indiastarsnow.com பாமக தனித்துப் போட்டி!!!!!!!!!!!!!!!!!!! Political News
விடாது பஞ்சமி நிலம்... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி? விடாது பஞ்சமி நிலம்… முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி? Political News
vijay-stalin-meet-www.indiastarsnow.com விஜயின் அரசியல் எண்ட்ரி Cinema News
thangamani_www.indiastarsnow.com தமிழகத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படுகிறதாக ? அமைச்சரின் பதில்!! Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme