தமிழக அரசின் இ பாஸ் செல்லாது-indiastarsnow.com
தமிழக அரசின் இ பாஸ் செல்லாது எனக் கூறி ஆந்திர எல்லையில் தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டம் செல்லவோ அல்லது மாநிலங்கள் இடையிலான போக்குவரத்திற்கோ இ பாஸ் பெற்று செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி இணையதளம் மூலம் இ பாஸ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வழங்கிய இ பாஸை ஏற்க ஆந்திரா போலீசார் மறுப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலுக்கும், மருத்துவமனை போன்ற தேவைகளுக்கும் தமிழகத்தில் இருந்து பலர் ஆந்திரா செல்கின்றனர். தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்று இபாஸ் மூலம் சென்றாலும், திருத்தணி அருகே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆந்திர எல்லைக்குள் செல்ல தமிழக அரசின் இ பாஸ் செல்லாது என்றும், ஆந்திர அரசின் இபாஸ் வேண்டுமென்றும் போலீசார் தெரிவிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தமிழக வாகனங்களை மீண்டும் திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு பணிகள் காரணமாக ஆந்திரா செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள அவர்கள், பல மணி நேரம் காத்திருந்தும் ஆந்திராவுக்குள் அனுமதி இல்லை. தமிழக அரசின் இபாஸ் செல்லாது என ஆந்திர போலீசார் தெரிவிக்கின்றனர். தமிழக இபாஸை ஏற்க வேண்டும். இதற்கு தமிழக அரசு ஆந்திர அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
20ஆயிரம் மது பாட்டில்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அழித்த காவல்துறை!