கோவில்பட்டி சிறையில் ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடைக்கப்படும்போதுஅவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், கோவில்பட்டி சிறையில் அவர்கள் அடைக்கப்படும்போது, அவர்களின் உடல்நிலை குறித்த சான்றை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
Thread on Tuticorin custodial deaths:
Times Now has accessed Kovilpatti sub-jail records.
The jail admission document shows that Jayaraj and Bennix were bleeding from their buttocks when they were brought to prison. #JusticeforJayarajAndFenix #JusticeForJayarajAndBennix pic.twitter.com/Z006BU6ddB — Shilpa Nair (@NairShilpa1308) June 27, 2020
அதில் ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோருக்கு பிட்டத்தில் இருந்து ரத்தம் வந்ததாகவும், காலில் வீக்கம் இருந்ததாகவும், முழங்கால்கள் மற்றும் மணிக்கட்டுகளில் காயம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜெயராஜூக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அடங்கில் சான்றில் ஜெயராஜ், பென்னீஸ் மற்றும் அவர்களை சிறையில் அடைக்க வந்த இரண்டு காவலர்களான செல்லதுரை மற்றும் முத்துராஜ் ஆகியோர் கையெழுத்து இட்டு உள்ளனர்.