‘இதுக்கு நான் பொறுப்பு இல்ல’ – லாக் டவுன் காலத்தை பற்றி ட்வீட் போட்ட பிரேம்ஜி..!!
பிரேம் குமார் கங்கை அமரன், சுருக்கமாக இவரை அனைவரும் பிரேம்ஜி என்று அழைப்பார்கள். பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன், மற்றும் பிரபல இயக்குநர்வெங்கட் பிரபுவின் தம்பி ஆவர். வெங்கட் கதை இல்லாமல் கூட படம் எடுப்பர், ஆனால் தனது தம்பி இல்லாமல் படம் எடுக்கமாட்டார் என்று பலரும் கூறும் அளவிற்கு இவர்களுடைய பாசப்பிணைப்பு உறுதியானது. இசை குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜி வெளிநாட்டிற்கு சென்று ராப் இசை கற்றவர். இசையமைப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்ற பன்முக திறமை கொண்டவர்.
2005ம் ஆண்டு வெளியான ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். சாம்பி, பார்ட்டி போன்று அண்மையில் வெளியான படங்கள் இவருடைய இசையில் வெளியான படங்கள் தான். ஜே.டி. ஜெர்ரி இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சந்திரமுகி படத்தில் இளைய திலகம் பிரபு சோகத்தோடு சொன்ன ‘என்ன கொடுமை சரவணன் இது’ என்ற அந்த வசனத்தை இவர் படு காமெடியாக மாற்றி பேசியது இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஊரடங்கு காலத்தில் பலரும் பல முறையில் தங்கள் நேரத்தை செலவிடும் நேரத்தில், பிரேம்ஜி பல சிறப்பான கருத்துக்களை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் “வழக்கம் போல எனது வாழக்கையில் இன்னொரு வருடத்தை நான் வீணடிக்கிறேன், ஆனால் இந்த முறை இது என்னுடைய தவறு அல்ல”, என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
When I realise that I am wasting another year of my life but this time it’s not my fault ??? — Premgi Amaren-indiastarsnow.com (@Premgiamaren)