இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுக்கா உட்பட்ட பல்வேறு பகுதியில் கல்லா கட்டி வந்த போலி மருத்துவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். 33 கிளினிக்குகளுக்கு சீல்வைக்கப்பட்டது.
கொரோனா தொற்றை பயன்படுத்திக்கொண்டு போலி டாக்டர்கள் வசூலில் ஈடுபட்டு வந்தனர். இந்த தகவல் இராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதரிஷினி இ.ஆ.ப.அவர்களின் பார்வைக்கு சென்றது. அதன் பேரில் சார் ஆட்சியர் இளம்பகவத் தலைமையிலான அதிகாரிகள் குழு சுழன்று அடித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.
அந்த வகையில் புலிவலம், கூடலூர் ரெண்டாடி, ஜம்புகுலம், பில்லாஞ்சி, மற்றும் சோளிங்கர் பேரூராட்சிக்கு உட்ப்பட்ட பல பகுதிகளில் மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த பலரை அதிகாரிகள் டீம் சுற்றி வளைத்தது.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட கொரோனோ தடுப்பு மருத்துவ அலுவலர் அய்ப்பன் மற்றும் சோளிங்கர் வட்டாச்சியர் பாஸ்கர் சோளிங்கர் வட்டார மருத்துவ அலுவலர் சுமதி மற்றும் காவல்நிலைய துனை ஆய்வாளர்கள் மகாராஜன், பாஸ்கர் ஆகியோர் இந்த ஆய்வு மேற்கொண்டர்.
ஒரு சிலர் ஓமியோபதி மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க பயன்படுத்திய ஊசி, மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துவ பொருட்களை கைப்பற்றி கிளினிக்குகளுக்கு சீல்வைத்தனர்?
இந்த நடவடிக்கை காட்டுத்தீ போல மாவட்டம் முழுவதும் பரவியதால் பல போலிகள் எஸ்கேப் ஆனார்கள். எனவே மீண்டும் அடுத்தடுத்த ரைடுகள் தொடரும் என்கிறார்கள் அதிகாரிகள்.