Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

The Indian Express Bigg Boss Tamil

பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும்? – எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ

Posted on June 27, 2020June 27, 2020 By admin No Comments on பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும்? – எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ

டிவி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸ் கடந்த மூன்று சீசன்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இம்மாதம் (ஜூன்) நான்காவது சீசன் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அதே சமயம், தற்போதைய லாக் டவுனில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானால் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடையும் என்பதால், அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம், நிகழ்ச்சியை எப்பாடியாவது நடத்திவிட வேண்டும், என்ற முனைப்பில் இருக்கிறது.

இதற்கிடையே, தமிழக அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு சமீபத்தில் அனுமதி அளித்ததோடு, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட 60 நபர்களுடன் தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்றும் கட்டுப்பாடு விதித்தது. அரசின் அறிவுறுத்தல் படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டு வருவதால், சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியவுடன், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியும் தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 17 போட்டியாளர்களுடன் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறும் 60 தொழிலாளர்கள் கொண்டு நடத்த முடியாது. சுமார் 400 தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டிய நிகழ்ச்சியை எப்படி 60 பணியாளர்களைக் கொண்டு நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பிய விஜய் டிவி, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தாமலும் இருக்க முடியாது, அதனால், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த உடன் நிகழ்ச்சியின் பணிகளை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டிமால் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4 குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. அவர்கள் இது குறித்து கூறுகையில், பிக் பாஸ் சீசன் 4 நிச்சயம் நடக்கும். ஆனால், தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் சில மாதங்கள் தள்ளிப்போகிறது. கமல்ஹாசன் தான் நான்காவது சீசனிலும் நடுவராக இருப்பார். மேலும், ஆகஸ்ட் மாதம் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று கூறப்படுவதால், அந்த மாதத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 4 பணிகளை தொடங்க இருக்கிறோம். மேலும், போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள், என்று தெரிவித்துள்ளது.
 The Indian Express Bigg Boss Tamil

Genaral News Tags:The Indian Express Bigg Boss Tamil

Post navigation

Previous Post: பூனம் பாண்டே! – வைரலாகும்
Next Post: பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த கொரோனாவால் மரணம்!

Related Posts

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ Genaral News
தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது Genaral News
நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது* – நடிகர் அசோக் செல்வன் வியப்பு Genaral News
மெரினா புரட்சியை வெளிக்கொண்டு வர இயக்குனர் நடத்திய சென்சார் போராட்டம் Genaral News
முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார் Genaral News
*ராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்* Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme