Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி

ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!!!!!

Posted on June 27, 2020June 27, 2020 By admin No Comments on ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!!!!!

கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், சினிமாத்துறையின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது. அதிலும், திரையரங்க துறை என்னவாகும் என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும், என்ற நிலையில் தான் இருக்கிறது.

இதற்கிடையே, ஒடிடி தளங்களில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக தொடங்கியிருப்பதும் திரையரங்க துறைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்தாலும் பாதிக்கப்பட்ட திரையரங்க தொழில் மீண்டும் பழைய நிலைக்கு வருவது கடினமான ஒன்றாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், சில தனி திரையரங்கள் மூடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் திரையரங்கங்கள் நடத்தி வரும் பி.வி.ஆர் குழுமம், சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் திரையரங்கங்களை திறக்க அனுமதி வழங்குங்கள். பிறகு படிபடியாக மற்ற இடங்களில் திறப்பது குறித்து முடிவு செய்யலாம், என்று கேட்டுக் கொண்டதாம்.

இதற்கு அமைச்சர் அமித்ஷா ஒக்கே சொல்லியிருப்பதாகவும், அதன்படி, வரும் ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், மத்திய அரசு திரையரங்கங்கள் திறக்க அனுமதி அளித்தாலும், இதில் முடிவு எடுக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடம் தான் விடும். அப்படி விட்டால், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது திரையரங்கங்கள் திறக்க அனுமதி வழங்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது

Cinema News Tags:ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி

Post navigation

Previous Post: 28 போலி டாக்டர்கள் கைது! 33 கிளினிக்குகள் மூடல்!! ஆட்சியர் நடவடிக்கை!!!
Next Post: பூனம் பாண்டே! – வைரலாகும்

Related Posts

தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது Cinema News
போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” - இயக்குநர் பிராஷ் போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” – இயக்குநர் பிராஷ் Cinema News
வரலாறு முக்கியம் திரை விமர்சனம் !! வரலாறு முக்கியம் திரை விமர்சனம் !! Cinema News
பப்பி படக்குழுவினருக்கு நித்யானந்தா சாமியார் சார்பிலும், தற்போது வக்கீல் நோட்டீஸ் Cinema News
Vishamakaran Film Audio Launch-indiastarsnow.co விஷமக்காரன் இசை வெளியீடு விழாவில் இயக்குனர் ஓபன் டாக்!! Cinema News
“கப்ஜா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme