இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கைது செய்தனர்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் ல் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈபிவி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில் ராட்சத கிரேன் திடீரென சரிந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் மீது விழுந்தது.இந்த விபத்தில் சங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, படப்பிடிப்பு தளத்தில் உணவு தயாரிப்புக் குழு உதவியாளராக பணியாற்றி வந்த மது, உணவுப்பொருள் விநியோக மேலாளராக இருந்த சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்கு காரணமான கிரேன் ஆப்ரேட்டரை போலீசார் தேடி வந்தநிலையில், தலைமறைவாக இருந்த ராஜனை நசரத்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தோருக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும் நடிகா் கமல்ஹாசன் அறிவித்தாா். லைகா நிறுவனம் ரூ. 2 கோடி உதவித்தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
