அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், மீ டூ குறித்து பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டார்.
தற்போது, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இதன் மூலம், சோசியல் மீடியாக்களில் ஷாலு ஷம்மு ஆக்டிவாக இருப்பதோடு, அவரது கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்ஸ் கொடுப்பதால், புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி, ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துவிட்டது. ஆம், இதுவரை ஆடையுடன் கவர்ச்சிக் காட்டி வந்த ஷாலு, நேற்றைய புகைப்படத்தில் ஆடை இல்லாமல் இருந்தார். உடலின் சில பாகங்களை ரோஜா இதழ்களால் மறைத்தபடி முழு நிர்வாண கோலத்தில் ஷாலு ஷம்மு வெளியிட்ட அந்த புகைப்படத்திற்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, கவர்ச்சியை குறைத்துக் கொள்வது நல்லது, என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.