Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஹீரோயினாக ரித்திகா சிங் சிறு வயது கனவை நினைவாக்கிய ‘ஓ மை கடவுளே

ஹீரோயினாக ரித்திகா சிங் சிறு வயது கனவை நினைவாக்கிய ‘ஓ மை கடவுளே

Posted on February 11, 2020February 11, 2020 By admin No Comments on ஹீரோயினாக ரித்திகா சிங் சிறு வயது கனவை நினைவாக்கிய ‘ஓ மை கடவுளே

’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து வரும் அக்ஸஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு, ஹாப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. காலதர் தினமான வரும் பிப்ரவரி 14 ஆ தேதி வெளியாக உள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அஷ்வத் இயக்கியிருக்கிறார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும், வாணி போஜனும் நடித்திருக்கிறார்கள்.
ஹீரோயினாக ரித்திகா சிங்

ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியாகும் செய்திகள், டீசர், டிரைலர் உள்ளிட்டவையே அதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில், கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்தும் ரித்திகா சிங், 3 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். பல படங்களை நிராகரித்த அவர், ‘ஓ மை கடவுளே’ கதைக்கு ஓகே சொன்னதற்கு முக்கிய காரணம், இக்கதையில் அவரது நீண்டநாள் சிறு வயது கனவு நிறைவேறுவதற்கான அம்சம் இருந்ததால் தான்.ஹீரோயினாக ரித்திகா சிங் சிறு வயது கனவை நினைவாக்கிய ‘ஓ மை கடவுளே

அது என்ன கனவு இன்று, அவரிடம் கேட்டதற்கு, “’ஓ மை கடவுளே’ என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்ட போது இது எனக்கு கிடைத்த தங்க வாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது.ஹீரோயினாக ரித்திகா சிங் சிறு வயது கனவை நினைவாக்கிய ‘ஓ மை கடவுளே

படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள். அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர் இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும். நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். ’ஓ மை கடவுளே’ வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும்.” என்று உற்சாகமாக பேசினார் ரித்திகா சிங்.ஹீரோயினாக ரித்திகா சிங் சிறு வயது கனவை நினைவாக்கிய ‘ஓ மை கடவுளே

பல பெரிய படங்களையும், வெற்றிப் படங்களையும் வெளியிட்டு வரும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:ஹீரோயினாக ரித்திகா சிங்

Post navigation

Previous Post: வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களை கவரும் ஒரு காதல் திரைப்படம்
Next Post: அடிபணிந்த ரஜினிகாந்த்?

Related Posts

Minister Mathiventhan said at the opening ceremony of A.I.M.S Aesthetic Training institute that everyone is taking more interest in skincare is a healthy thing and it will give positive energy. ஏ.ஐ.எம்.எஸ் அழகியல் பயிற்சி மையத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!! Cinema News
கே.ஜி.எப்-2 திரைப்பட படக்குழு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி கே.ஜி.எப்-2 திரைப்பட படக்குழு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி Cinema News
Mr. Miss & Mrs Tamilnadu 2022 beauty pageant will be held in Coimbatore in a Grand Manner with the support of Indian Media Works John Amalan announced by Ukiyo company organised by Haja and Nikhil. Mr. Miss & Mrs Tamilnadu 2022 beauty pageant will be held in Coimbatore in a Grand Manner with the support of Indian Media Works John Amalan announced by Ukiyo company organised by Haja and Nikhil. Cinema News
meenakshi govindarajan Hot Pic-indiastarsnow.com meenakshi govindarajan Hot Pic Cinema News
surya-indiastarsnow.com அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌!சூர்யா Cinema News
தலைவி - சென்னையில் நோ... மும்பையில் மட்டும் ஓகே தலைவி – சென்னையில் நோ… மும்பையில் மட்டும் ஓகே!!!! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme