Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

Posted on February 10, 2020 By admin No Comments on நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகை ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில், பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றிருக்கிறது.

படம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறியதாவது…நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே தேர்வு செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள்.
அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர் இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகையுடன் நடந்துகொள்வார்.நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

. நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். “ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும் என்றார்.

Cinema News Tags:நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

Post navigation

Previous Post: ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன்
Next Post: Priya Bhavani Shankar‬ Latesr Pic

Related Posts

'இறைவன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! ‘இறைவன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! Cinema News
பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்" டீசர் பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர் Cinema News
International Film And Music Festival 2020-indiastarsnow.com International Film And Music Festival 2020 Cinema News
Director Bharathiraja launches Kabilan Vairamuthu’s Aagol Director Bharathiraja launches Kabilan Vairamuthu’s Aagol Cinema News
முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ் லாக்திரைப்பட விழாவில்!! Cinema News
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம் அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme