Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மலேசியாவில் தைப்பூச திருவிழா அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் நேர்த்திக் கடன்

மலேசியாவில் தைப்பூச திருவிழா

Posted on February 8, 2020February 8, 2020 By admin No Comments on மலேசியாவில் தைப்பூச திருவிழா

மலேசியாவில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. தைப்பூசம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப் படுகிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிலும் இன்று தைப்பூசத் திருவிழா களை கட்டியது. கோலாலம்பூரின் புறப்பகுதியில் உள்ள பத்துகுகை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடம்பில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதே போல் ஆண்கள், பெண்கள் என பலரும் பால்குடம் ஏந்தி, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்தும் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிப்பட்டு வருகின்றனர்.

மலேசியாவில் தைப்பூச திருவிழா அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் நேர்த்திக் கடன்

Genaral News Tags:மலேசியாவில் தைப்பூச திருவிழா அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் நேர்த்திக் கடன்

Post navigation

Previous Post: அதிர்ச்சியில் கதறி அழுத சீமான்
Next Post: கொரோனோ வைரஸால் சீன நர்ஸ்கள் படும் அவஸ்த்தைகள்

Related Posts

மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும் மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்? Genaral News
Food for two as Food 42 – Actress Sakshi Agarwal participated in Lets Feed the HUNGRY together on World Hunger Day Genaral News
OPPO F23 5G Smart Phone Launches Chennai Briefing Assistant PR Manager at OPPO MOBILES INDIA PVT LTD-indiastarsnow.com உங்கள் சூப்பர் பவரைக் காட்டுங்கள் OPPO F23 5G அல்டிமேட் பேட்டரி பவர்ஹவுஸ் உடன் Genaral News
நக்‌ஷத்ரா’ அறிமுகம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ அறிமுகம் Genaral News
இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம் Genaral News
இன்றைய தேர்தல் செய்திகள் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme