சீனாவில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்நேரமும் மாஸ்க் அணிந்தபடியே சேவை செய்வதால் செவிலியர்களின் முகங்களில் அந்த அடையாளம் பதிந்துள்ளது. சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பால் 550 பேர் உயிரிழந்துள்ளனர். 24,000-க்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனோ வைரஸ் பாதித்தவர்களுக்கு சீனாவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராடி வருகின்றனர். கொரோனோ வைரஸ் தங்களையும் பாதிக்காமல் இருக்க மருத்துவமனையில் இருக்கும் செவிலியர்கள் எந்நேரமும் மாஸ்க் அணிந்தபடியே உள்ளனர். இதனால் அவர்களது முகத்தில் மாஸ்கின் அடையாளம் படிந்து முகம் முழுவதும் காணப்படுகிறது.
இருந்தபோதும் அவர்கள் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தன்னலமற்ற செவிலியர்களின் சேவைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு கொரோனோ வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கிடைக்கும் இடங்களில் படுத்து உறங்கும் புகைப்படம் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியது. கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 2 முதல் 3 மணி நேரமே தூங்கும் பரிதாபமும் ஏற்பட்டுள்ளது.