Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அதிர்ச்சியில் கதறி அழுத சீமான்

அதிர்ச்சியில் கதறி அழுத சீமான்

Posted on February 8, 2020February 8, 2020 By admin No Comments on அதிர்ச்சியில் கதறி அழுத சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாகன ஓட்டுநராக நாகை மாவட்டம் எருக்கூர் அருகே இருக்கும் தில்லை பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்கிற அன்புசெழியன் பணியாற்றி வந்தார். பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் போது கட்சி நிகழ்வுகள் சம்பந்தமாக வெளிமாவட்டங்களுக்கு செல்லும்போதும் சீமானின் காரை அன்பு செழியன் தான் ஓட்டி செல்வார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அன்புச் செழியன், சிகிச்சை பலனின்றி திடீரென மருத்துவமனையில் உயிரிழந்தார்.அதிர்ச்சியில் கதறி அழுத சீமான்

அன்புச்செழியன் மரணமடைந்த செய்தி அறிந்த சீமான் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தில்லைப்பட்டினம் கிராமத்திற்கு சென்றார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் சென்றார். அன்புச்செழியன் வீட்டிற்கு சென்ற சீமான், அங்கு அவரது உடலைப்பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இறுதி சடங்கில் அன்புவின் சடலத்தை முதல் ஆளாக சீமான் தூக்கிவந்தார்.
அதிர்ச்சியில் கதறி அழுத சீமான்
இதுகுறித்து சீமான் கார் ஓட்டுநர் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இரங்கல் குறிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதில், சீமானிற்கு வெறும் வாகன ஓட்டுனராக மட்டுமல்லாது அவரது குறிப்பறிந்து தேவைகளை பூர்த்தி செய்கிற ஒரு தம்பியாக இருந்துள்ளார். அவரது உயிர்க்காப்பாளனாக, எப்பொழுதும் புன்னகை மாறாது தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த தம்பியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறப்பட்டிருந்தது.அதிர்ச்சியில் கதறி அழுத சீமான்

Cinema News, Political News Tags:அதிர்ச்சியில் கதறி அழுத சீமான்

Post navigation

Previous Post: Kabadadaari Film song shoot
Next Post: மலேசியாவில் தைப்பூச திருவிழா

Related Posts

அருவா சண்ட திரை விமர்சனம் அருவா சண்ட திரை விமர்சனம் Cinema News
தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ உலகநாயகன் கமல்ஹாசன் பூரிப்பு Cinema News
சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார் Cinema News
“VELS University International Women’s day celebrations” Cinema News
Big deals for “Anti-Indian” OTT & Satellite Rights!! Cinema News
ஆடி தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம் !!! ஆடி தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம் !!! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme