இயற்கை எழில் கொஞ்சும் கோத்தகிரி மலைப்பகுதியில் ஒரு கிராமத்தில் சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வம் வந்து சமூக விரோதிகள் சிலரை கொடூரமாக கொல்கிறது. போலீஸ் இதை நம்ப மறுத்து கிராம மக்களை பிடித்து விசாரிக்கின்றனர். அப்போதுதான் வினோத் கிஷன், அம்மு அபிராமியின் பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன.
கோத்தகிரி மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் (மனோகரன்) முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த முருகன் (வினோத்), வள்ளி (அம்மு அபிராமி)யும் மக்களை ஒன்று சேர்த்து அந்தக் கும்பலை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே மீதிக்கதை.அடவி திரை விமர்சனம்
வினோத் கிஷன் மலைவாழ் இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என நன்றாக நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக வந்து உள்ளங்களை கொள்ளையடிக்கிறார். அழகான காதலியாக மட்டும் அல்லாமல் சிலம்பு சுற்றும் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார்.
வள்ளியின் தோழியாக வரும் விஷ்ணுபிரியாவுக்கு சிறப்பான கதாபாத்திரம். தனது பங்களிப்பை உணர்ந்து நடித்துள்ளார். ராஜபாண்டியன், ஆர்.என்.ஆர்.மனோகர், முத்துராமன், கே.சாம்பசிவம் ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரத்துக்கு உரிய சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே பல திரைப்படங்களில் காட்டிய மலைவாழ் மக்களை விரட்டியடிக்கும் கதை என்ற தோற்றம் இருந்தாலும், தேன்மொழி தாஸின் வசனமும், ரமேஷ்.ஜி ஒளிப்பதிவும் நம்மை இருக்கையில் கட்டிப்போகிறது.