திருப்பூர் நகராட்சியில் தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இது தொடர்பாக நகராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தட்டி கழித்துள்ளனர் அதிகாரிகள்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் பொறுமை இழந்த நபர், வீணாக செல்லும் தண்ணீரில் சோப், ஷாம்பூ போட்டு நடு ரோட்லயே குளிக்க தொடங்கி விட்டார். இவரது வீடியோ மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவகிறது. இதை பார்த்தாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
