திருடா திருடி’, `யோகி’, `சீடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா, தற்போது `வெள்ளை யானை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தவிர, அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நடிகர் தனுஷ் பற்றி சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் தனுஷ், கவுண்டமணி யின் அதிதீவிரமான ரசிகர். கவுண்டமணி அண்ணனைப் பத்தி என்ன கேட்டாலும் இந்தப் படம், இந்த சீன்னு சரியா சொல்லிடுவார், தனுஷ். எப்பவும் அவர் கேரவன்ல கவுண்டமணி அண்ணனுடைய காமெடிதான் ஓடிக்கிட்டிருக்கும். `ப.பாண்டி 2’னு பிளான் பண்ணி, அதுல ராஜ்கிரண் அண்ணனையும், கவுண்டமணி அண்ணனையும் நடிக்க வைக்கணும்னு பிளான் பண்ணோம். அவரை வெச்சு ஒரு படம் இயக்கணும்னு தனுஷுக்கு ஆசை.”
