இயக்குனர் செல்வரகவன் இயக்கிய அரசியல் படமான என்.ஜி.கே மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கிய ஆக்ஷன் என்டர்டெய்னர் கப்பன் ஆகியவற்றுடன் நடிகர் சூரியா இந்த ஆண்டு இரண்டு வெளியீடுகளை வழங்கியிருந்தார். அடுத்து நடிகர் சூர்யா தனது 38 வது திரைப்படமான “” படத்தின் வேலைகளை முடித்துள்ளார், இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
முன்னதாக இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல் மற்றும் மோகன் பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் சம்மர் 2020 யில் வெளியிட திட்டமிடப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
“சூரரைப் போற்று ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபினாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் சூர்யா இப்படத்தில் நெடுமாறன் என்கிற மாறா என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்ற ’மாறா தீம்’ என்ற பாடல் சூர்யாவின் குரலில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாடலாசிரியர் விவேக் எழுதிய வெய்யோன் சில்லி’ என்று தொடங்கும் இந்த பாடலை ஹரி சிவராம கிருஷ்ணன் என்பவர் பாடியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சிங்கிள் பாடலான எண்ணி ’செய்யோன் சில்லி\ என்ற பாடல் பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே சூர்யா பாடிய ’மாறாதீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய ஹிட்டாகி நிலையில் தற்போது அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது சூர்யாவின் ரசிகர்கள் உள்ளனர்