தமிழில் விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர். அதோடு ரீமேக் செய்யவும் முனைப்பு காட்டினர். அந்த வகையில் இப்படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கும் நல்ல வசூல் பார்த்தது.
இந்நிலையில், இப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் சமந்தா நடிக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி ரிலீசாகிறது. 96 படத்தை எடுத்த பிரேம்குமார் தான் ஜானு படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜானு என்ற தலைப்பு எப்படி வந்தது என்பது குறித்த ருசீகர தகவல் வெளியாகியுள்ளது.
இதே பெயரில் பிரபாஸ் ஒரு படத்தில் நடித்து வந்தார். இதனிடையே 96 படத்தின் ரீமேக்கிற்கு ஜானு என்ற தலைப்பு தான் பொறுத்தமாக இருக்கும் என முடிவு செய்த இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, பிரபாசிடம் இதுதொடர்பாக பேசியுள்ளார். இதனை ஏற்ற பிரபாஸ் ஜானு என்ற தலைப்பை விட்டுக்கொடுத்துள்ளார்.