Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு

Posted on February 6, 2020 By admin No Comments on டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு

திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வருடம் 2018ல் அவர் நீக்கப்பட்டார். மேலும், 2018ம் ஆண்டுக்கான சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என ஆதாரங்களுடன் சின்மயி வாதிட்டார். இதையடுத்து, பாடகி சின்மயியை, டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், 2020, 2022ம் ஆண்டுக்கான டப்பிங் யூனியன் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தல் வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால் பாடகி சின்மயி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சின்மயி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார். இதனால், பாடகி சின்மயி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக அணுகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Cinema News Tags:2018ம் ஆண்டுக்கான சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என ஆதாரங்களுடன் சின்மயி வாதிட்டார். இதையடுத்து, 2020, 2022ம் ஆண்டுக்கான டப்பிங் யூனியன் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வருடம் 2018ல் அவர் நீக்கப்பட்டார். மேலும், சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, பாடகி சின்மயியை

Post navigation

Previous Post: நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை திறப்பு
Next Post: வலைத் தொடரில் அறிமுகம் ஆகும் உலகநாயகன்

Related Posts

தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!! Cinema News
இறப்பு கம்பீரமானது என சொல்லும் ‘டியர் டெத்’ இறப்பு கம்பீரமானது என சொல்லும் ‘டியர் டெத்’ Cinema News
விஜயானந்த்’ படத்தின் முதல் பாடலுக்கான வீடியோ வெளியீடு Cinema News
Actor Sivakarthikeyan Upcoming Movie Maaveeran Actor Sivakarthikeyan Upcoming Movie Maaveeran Cinema News
The Massive Combo BoyapatiRAPO film launched with Pooja ceremony Herewith i forward the press release pertaining to “BoyapatiRAPO Project” Cinema News
Darbar-rajni-www.indiastarsnow.com சூப்பர்ஸ்டாருக்கு உரிய கெத்தை காட்டுகிறது தர்பார் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme