பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் – நடிகை சனம் ஷெட்டியின் காதல் முறிவு தற்போது போலீஸ் புகார் வரை வந்துள்ளது. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தர்ஷன் சனம் ஷெட்டியை நிராகரித்திருப்பதோடு, அவரிடம் அதிகமாக பண உதவியும் பெற்றிருப்பதாக சனம் ஷெட்டி புகாரில் தெரிவித்துள்ளார்.
சனம் ஷெட்டியின் புகாரை மறுத்திருக்கும் தர்ஷன், நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான். ஆனால், சனம் ஷெட்டியிடம் பண உதவி பெறவில்லை. சில குறிப்பிட்ட பண உதவி பெற்றிருந்தாலும், அதை திரும்ப கொடுத்துவிட்டேன், என்றவர், தான் பிக் போட்டியில் பங்கேற்றதில் இருந்தே சனம் ஷெட்டி தன் மீது கோபமாக இருந்ததோடு, தன்னை மிரட்டியும் வந்ததாக கூறினார்.
மேலும், தான் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி, அவரது எக்ஸ் காதலருடன் இரவில் பார்ட்டியில் பங்கேற்றார், அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தேவைப்பட்டால் கமிஷ்னர் அலுவலகத்தில் அத்தனை ஆதாரங்களையும் வழங்குவேன். சனம் ஷெட்டியை திருமணம் செய்ய்துக் கொள்ள மாட்டேன், என்று தர்ஷன் கூறிவிட்டார்.
இந்த நிலையில், சனம் ஷெட்டியும், அவரது முன்னாள் காதலர் அஜயும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.