Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஓ மை கடவுளே படத்தின்?

ஓ மை கடவுளே படத்தின்?

Posted on February 4, 2020 By admin No Comments on ஓ மை கடவுளே படத்தின்?

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் நடிகர் சூர்யா வெளியிட்டார். ஏற்கனவே வெளியான டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது வெளியான டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை Youtube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. ஓ மை கடவுளே படத்தின்?

டிரெய்லரின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் படத்தின் கதையோட்டத்திற்கு ரசிகர்களை மிகச்சரியாக தயார்படுத்தும்படி அமைந்துள்ளதே ஆகும். முதலில் டிரெய்லர் படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. முடிவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி பாத்திரம் அசோக் செல்வனிடம் “கோல்டன் டிக்கெட்” ஒன்றை தருவதாக அமைந்துள்ளது.ஓ மை கடவுளே படத்தின்

பரபரப்பு கிளப்பியிருக்கும் இந்த டிரெய்லர் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியதாவது… “கோல்டன் டிக்கெட்”பற்றி இப்போது எதுவும் கூற முடியாது அது திரையில் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அந்த டிவிஸ்ட் படத்தை வெகுவாக சுவாரஸ்யபடுத்தும். இப்படம் காதல், ரொமான்ஸ், காமெடி கடந்து படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் அவர்களுக்கான அழுத்தமான பின்னணியுடன் உணர்வுபூர்வமாக இருப்பதாக இருக்கும். இந்த காதலர் தினத்திற்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப்படம் இருக்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

அசோக் செல்வன், ரித்திகா சிங் நாயகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் செதுபது மிக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓ மை கடவுளே படத்தின்

Cinema News Tags:ஓ மை கடவுளே படத்தின்?

Post navigation

Previous Post: “முருகக் கடவுளைக் கொண்டாட எங்களுக்கும் உரிமை உள்ளது” ; சர்ச்சைக்கு பதில் அளித்த காக்டெய்ல் இயக்குநர் முருகன்
Next Post: சைக்கோ வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Related Posts

Legendary Actor Sivakumar presides Producer Dr.G. Dhananjayan’s younger daughter Harita’s wedding Legendary Actor Sivakumar presides Producer Dr.G. Dhananjayan’s younger daughter Harita’s wedding Cinema News
புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் Cinema News
RadheShyam தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார் Cinema News
குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார் Cinema News
திரைப்படைப்பாளி ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது ! திரைப்படைப்பாளி ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது ! Cinema News
Jayam Ravi-Nayanthara starrer “Iraivan” Title & First Look is out now Jayam Ravi-Nayanthara starrer “Iraivan” Title & First Look is out now Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme