நடிகர் அஜித்தை எப்படி அவ்வளவு எளிதாக வெளியே பார்க்க முடியாதோ அப்படி தான் அவரது குடும்பத்தையும் பார்க்க முடியாது.
ஆனால் ஷாலினி அவர்கள் தனது குழந்தைகளுடன் வெளியே செல்லும் போது ரசிகர்களால் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சில சமயம் வைரலாகும்.
அண்மையில் ஷாலினி அவர்கள் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார்.
அங்கு புலியின் குகையில் இருந்த ஒரு குட்டி புலி அங்கு பணிபுரிந்த ஒருவரை கடித்துள்ளது, உடனே பக்கத்தில் இருந்த மற்றொரு பணியாளர் அவருக்கு உடனே முதலுதவி செய்துள்ளார்.
இந்த சம்பவம் பார்த்து அஜித்தின் குழந்தைகள் மற்றும் அங்கு பார்க்க வந்தவர்களும் ஷாக் ஆகியுள்ளனராம்.