Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

“முருகக் கடவுளைக் கொண்டாட எங்களுக்கும் உரிமை உள்ளது” ; சர்ச்சைக்கு பதில் அளித்த காக்டெய்ல் இயக்குநர் முருகன்

“முருகக் கடவுளைக் கொண்டாட எங்களுக்கும் உரிமை உள்ளது” ; சர்ச்சைக்கு பதில் அளித்த காக்டெய்ல் இயக்குநர் முருகன்

Posted on February 3, 2020 By admin No Comments on “முருகக் கடவுளைக் கொண்டாட எங்களுக்கும் உரிமை உள்ளது” ; சர்ச்சைக்கு பதில் அளித்த காக்டெய்ல் இயக்குநர் முருகன்

“காக்டெய்ல் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் எந்த உள்நோக்கமும் இல்லை” – இயக்குநர் முருகன் விளக்கம் “முருகக் கடவுளைக் கொண்டாட எங்களுக்கும் உரிமை உள்ளது” ; சர்ச்சைக்கு பதில் அளித்த காக்டெய்ல் இயக்குநர் முருகன்

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் யோகிபாபு முருகன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பார்த்துவிட்டு சில இந்து அமைப்புகள் படத்தில் முருகனை தவறாக சித்தரித்துள்ளதாகவும் இது தங்களது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து காக்டெய்ல் படத்தின் இயக்குநர் முருகன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது ;

“நிச்சயமாக எந்த யாரின் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதையும் சரி, இந்த போஸ்டரும் சரி உருவாக்கப்படவில்லை.. என் பெயரிலேயே முருகனை கொண்டுள்ள நானும் ஒரு முருக பக்தன்.. யோகிபாபுவும் ஒரு முருக பக்தர். அதனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. இந்த படத்தின் கதைப்படி முருகன் சிலை ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாங்கள் வடிவமைத்தோம்

முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திரு விழாக்களில் முருகர் வேடமிடுகிறோம். சிவன் வேடம் அணிகிறோம்.
மாறுவேடப் போட்டிகளில், தமிழர் கலை சார்ந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வேடங்கள் அணிகிறோம்…

எம் முருகப் பெருமானை வேடமிட்டு ஆராதிப்பது தமிழக மக்களின் வாடிக்கை தானே..?

அதையே சினிமாவில் காட்டும்போது மட்டும் எப்படி தவறாகி விடும்..?

இது முருகன், சிவனை போன்ற கடவுளை வழிபடும் கொண்டாடும் எங்களைப் போன்ற ஒவ்வொருக்கும் உண்டான தனிப்பட்ட உரிமையாகத்தான் பார்க்கிறோம்..

நாங்கள் வழிபடும் கடவுளை நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்..?

இது ஒரு மதுவை மையப்படுத்திய படமும் அல்ல.
இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள காக்டெய்ல் என்கிற டைட்டில் கூட ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு காக்டெய்ல் என்கிற கிளியை மையப்படுத்தியே வைக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கும் வேறு எந்த தவறான காரணமும் இல்லை.

அதனால்தான் இந்த போஸ்டரில் முருகனின் வாகனமான மயிலை பயன்படுத்துவதற்குப் பதிலாக அந்த காக்டெய்ல் என்கிற கிளியை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம்” என விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் முருகன்

Cinema News Tags:“முருகக் கடவுளைக் கொண்டாட எங்களுக்கும் உரிமை உள்ளது” ; சர்ச்சைக்கு பதில் அளித்த காக்டெய்ல் இயக்குநர் முருகன்

Post navigation

Previous Post: நாடோடிகள் 2 திரைவிமர்சனம்
Next Post: ஓ மை கடவுளே படத்தின்?

Related Posts

இப்படத்தின் டீஸர் வெளியானதும் பார்க்கிறேன்; எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் – நடிகை சுனைனா லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது; நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின் Cinema News
anmirniyal film-review -indiastarsnow.com அன்பிற்கினியல் படத்தின் திரைவிமர்சனம் Cinema News
PoojaKumar beautifu picture PoojaKumar beautifu picture Cinema News
அசுரன்' அமெரிக்காவில் 110 திரையரங்குகளில்-www.indiastarsnow.com அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது Cinema News
நடிகை வரலட்சுமி கொரோனா பரவலைத் தடுக்ககும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி-indiastarsnow.com நடிகை வரலட்சுமி சரத்குமார் கொரோனா பரவலைத் தடுக்ககும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி!! Cinema News
Bigil-film-www.indiastarsnow.com பிகில் படத்தின் சுட சுட வெளியான சூப்பர் தகவல்! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme