Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

னி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்

போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்

Posted on February 3, 2020February 3, 2020 By admin No Comments on போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்

அஜித் அறிமுகமான முதல் படம் ’அமராவதி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பானு பிரகாஷ் என்பவரின் மகன் ராஜ் அய்யப்பா என்பவர் தற்போது ’வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இணைந்துள்ளார்
அமராவதி படம் வெளியான பின்னர் பல வருடங்களுக்குப் பின்னர் ஒரு நாள் தற்செயலாக பானு பிரகாஷ் அஜித்தை சந்தித்த போது, அஜித் தன்னுடைய மகனுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு விரைவில் அவர் நடிகர் ஆவார் என்று கூறியதாகவும், தற்போது அவர் கூறியபடியே நடிகராகியிருப்பதாகவும், அதுவும் அஜித் படத்திலேயே முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பானு பிரகாஷ் கூறியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது

ராஜ் அய்யப்பா ஏற்கனவே அதர்வா முரளி நடித்த ’100’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வலிமை படத்திலும் அவருக்கு வில்லத்தனமான ஒரு கேரக்டர்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட இந்தியாவிலும் அதனை அடுத்து சுவிட்சர்லாந்திலும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக ’காலா’ படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

Cinema News Tags:னி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்

Post navigation

Previous Post: சீறு படத்தின் பாடல் விழாவில் பேசிய இசையமைப்பாளர் டி இமான்
Next Post: இசக்கி குடும்ப வாரிசான நான்

Related Posts

Veetla Vishesham Zee Studios & BayView Projects in Association with Romeo Pictures Boney Kapoor presents Cinema News
இந்திய திரையுலக பிரபலங்கள் வாழ்த்தும் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம் இந்திய திரையுலக பிரபலங்கள் வாழ்த்தும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம் Cinema News
பிரபுதேவாவின் ரேக்ளா படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது பிரபுதேவாவின் ரேக்ளா படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது Cinema News
நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணைந்து நடிக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு Cinema News
sunny-leone-indiastarsnow.com படப்பிடிப்பில் ஏமார்ந்த நடிகை சன்னி லியோன் பாவம் Cinema News
குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை - தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை – தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme