பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் திருமணம் செய்வதாக கூறிவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக திரைப்பட நடிகை சனம் ஷெட்டி நேற்று கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இரு விட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதோடு, திருமண தேதியும் முடிவு செய்த பிறகு தர்ஷன், திடீரென்று திருமணத்தை நிறுத்தியிருக்கிறார், என்று கூறிய சனம் ஷெட்டி, இதுவரை தர்ஷனுக்கு தான் ரூ.15 லட்சம் செலவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம், தான் செலவு செய்த பணத்தை தான் கேட்கவில்லை, என்ற சனம் ஷெட்டி, தர்ஷன் வாழ்க்கையில் நான் இருந்தேன், என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும், என்றும் கூறினார்.
இந்த நிலையில், சனம் ஷெட்டியின் புகாரை மறுத்திருக்கும் தர்ஷன், சனம் ஷெட்டியை காதலித்தது, திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது உண்மை தான். ஆனால், எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்த பிறகு சனம் ஷெட்டியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து எனக்கு அவர் தொல்லை கொடுத்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது, என்னை பற்றி அவர் பேட்டி கொடுத்தது எனக்கு பிடிக்கவில்லை. அதேபோல், அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று என் மீது கோபமாக இருந்தார்.
தொடர்ந்து என்னக்கு தொல்லை கொடுத்தவர், என்னை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க இருக்கும் நிறுவனங்களுக்கு சென்று தர்ஷனை வைத்து படம் தயாரிகாதீர்கள், என்று கூறினார். அதன் பிறகு தான் அவருக்கும், எனக்கும் செட்டாகது என்ற முடிவுக்கு வந்தேன், என்றார்.
பிறகு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சனம் ஷெட்டி, எனது பெற்றோர் குறித்தும் தவறாக பேசியிருக்கிறார். அவர்கள் என் தங்கைக்கு திருமணம் முடிந்த பிறகு தனது திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், சனம் ஷெட்டி பல பொய்யான புகார்களை சுமத்துகிறார்.
நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, அவர் அவரது எக்ஸுடன் இரவு பார்ட்டியில் கலந்துக் கொண்டார். இது போல அவர் செய்த பல தவறான விஷயங்களுக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. கமிஷ்னர் அலுவலகம் என்னை விசாரித்தால், அங்கு என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன். மற்றபடி சனம் ஷெட்டி மீது வழக்கு தொடரும் எண்ணம் எனக்கில்லை, என்று தர்ஷன் தெரிவித்துள்ளார்.