Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம்

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம்

Posted on February 1, 2020 By admin No Comments on “ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம்

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் !

காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச்செய்துள்ளது.

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது பற்றி கூறியாதாவது…

இப்படத்தில் சில காட்சித்தொடர்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக்காட்சிகளில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும் காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சின் போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். ஆனால் அவர் ஒப்புக்கொள்வாரா ? எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது. ஆனால் இயக்குநர் அவரை அணுகி கதையையும், அவரது பாத்திரம் குறித்தும் கூறிய போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் இருந்து நடித்து தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரு விருந்து காத்திருக்கிறது. இப்படம் இளைஞர்களை கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம்த் தோற்றம்

Cinema News Tags:“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம்

Post navigation

Previous Post: பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் திருமணம் செய்வதாக கூறிவிட்டு தன்னை ஏமாற்றி
Next Post: Director Gautham Vasudev Menon’s cameo in Oh My Kadavule

Related Posts

‘ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா! ‘ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா! Cinema News
டெவில்ஸ் நைட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது நடிகர் நெப்போலியன் டெவில்ஸ் நைட்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது Cinema News
கொரோனோ வைரஸால் சீன நர்ஸ்கள் படும் அவஸ்த்தைகள் கொரோனோ வைரஸால் சீன நர்ஸ்கள் படும் அவஸ்த்தைகள் Cinema News
சொப்பன சுந்தரி' ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘சொப்பன சுந்தரி’ ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் Cinema News
Actor R MADHAVAN’S ROCKETRY Movie Join CANNES FILM FESTIVAL Actor R MADHAVAN’S ROCKETRY Movie Join CANNES FILM FESTIVAL Cinema News
ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும் ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme