டிரான்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் மாஸ் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார். மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து, இயக்கும் இதில் ஹீரோவாக ஃபஹத் பாசில் நடிக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ஃபஹத் பாசில் கலர்ஃபுல் டிஸ்கோ டான்ஸராகக் காட்சியளித்தார். தற்போது நஸ்ரியாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், ஸ்டைலிஸ் ஹேருடன் வாயில் சிகரெட் இருப்பது போன்று தோன்றியுள்ளார். இதனால் இதில் நஸ்ரியாவின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரான்ஸ் படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகக் கன்னியாகுமரி, கேரளா, துபாய் மற்றும் ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நஸ்ரியா கணவர் ஃபஹத் பாசிலுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே போன்று விரைவில் கோலிவுட்டில் ஒரு நல்ல கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.