நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு நாளாக கொண்டாட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 26 முதல் அம்பேத்கர் ஜெயந்தியான ஏப்ரல் 14 வரை தொடர்ச்சியாக கொண்டாட்டங்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குழு விவாதங்கள், கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை மாவட்ட, மாநில அளவில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் நவம்பர் 26ஆம் தேதியன்று மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தி நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை மாணவர்களுக்கு விளக்கவும், சிறந்த அரசியல் ஆளுமைகளை அழைத்து வந்து மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு பற்றி வகுப்புகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
