Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு

Posted on November 2, 2019 By admin No Comments on தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.

டெல்லியில் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணரும் யாரும், டீசல் பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என்றும் ஜெர்மனி பிரதமர் குறிப்பிட்டார்.

Genaral News, Political News Tags:தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு

Post navigation

Previous Post: செந்திலுக்கு பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
Next Post: நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு நாளாக கொண்டாட உத்தரவு!

Related Posts

Shashi_tharoor-indiastarsnow.com சசி தரூர் டுவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய Political News
Prashanth Hospitals Launches “Save Young Hearts” Film Festival in association with Loyola College Visual Communication Department Genaral News
arnatic vocalist Aruna Sairam selected for French government's top honour Chevalier Award arnatic vocalist Aruna Sairam selected for French government’s top honour Chevalier Award Genaral News
நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'அடடே சுந்தரா' டீசர் வெளியீடு நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ டீசர் வெளியீடு Genaral News
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்.. பரபரக்கும் ஹேஷ்யங்கள்.. கேரளாவுக்கு வாய்ப்பு Genaral News
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்கவுள்ளனர் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme