Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

Posted on November 2, 2019 By admin No Comments on கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

.:

எலும்பு உறுதி.:

வயது ஆகும் போது மனிதர்கள் அனைவரின் எலும்புகளும் உறுதித்தன்மையை இழக்கும். தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

காயங்கள்.:

நமது உடலின் வெளிப்பகுதியில் பல்வேறு காரணங்களால் காயங்கள் ஏற்படுகின்றன. இது தானாக ஆறும் என்றாலும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு வெகு விரைவில் காயங்கள் ஆறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பு நாம் உண்ணும் உணவில் அதிகளவு கொலஸ்ட்ரால் சேருவது உடலநலத்திற்கு தீங்கானது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ரத்தம் உறைதல்.:

ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் அருந்தி வருவதால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.

புற்று நோய்.:

தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு அவர்களின் உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக கூறுகின்றனர்.

கண்பார்வை.:

கேரட்டில் கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். மாதவிடாய்…

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்படி அவதியுறுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும். வளர்சிதை மாற்றம் கேரட்டில் பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதிலுள்ள மூலப்பொருட்கள் உடல்செல்களின் வளர்சிதை மாற்றத்திறனை சமநிலைப்படுத்தி, உடலின் சீரான இயக்கத்திற்கும், உடல் நலத்திற்கும் உதவுகிறது. தொற்று நோய்கள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் அருந்தி வருவது சிறந்தது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.

கல்லீரல்.:
நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது நமது கல்லீரலின் நலத்திற்கும் அதன் சிறந்த செயல்பாட்டிற்கும் சிறந்தது. பற்கள் நமது வாய்க்குள் இருக்கும் பற்கள் உணவை நன்கு மென்று திண்பதற்கு உதவுகிறது. பற்கள் சொத்தையாவது, ஈறுகளில் வீக்கம், மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு ஏற்படுவதில்லை.

குழந்தைகள்.:

ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கேரட் சாற்றை தினந்தோறும் அருந்த கொடுப்பதால் அவர்களின் வளர்ச்சி மேம்படுகிறது. அடிக்கடி நோய்தாக்குதலுக்கு உட்படுவதும் குறைகிறது.

Health News Tags:கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

Post navigation

Previous Post: உணவே மரு‌ந்து
Next Post: வெல்லம் மருத்துவப் பயன்கள்

Related Posts

சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள சந்தையில் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள சந்தையில் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. Genaral News
மித்ஷாவிடம் கேளுங்கள் என்னிடம் வேண்டாம்.ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்காத மோடி. Health News
பிரபல இயக்குநர் ‘அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் !!!!@ Cinema News
வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக நோய் குணப்படுத்தலாம் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக நோய் குணப்படுத்தலாம். Health News
தமிழகம் முழுவதும் உள்ள ரைபிள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் தமிழகம் முழுவதும் உள்ள ரைபிள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் Cinema News
முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள் முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme