சினிமாவில் உள்ள பிரபலங்கள் நடிப்பையும் தாண்டி தனிப்பட்ட முறையில் எதாவது ஒரு தொழிலைச் செய்து வருகின்றனர்.
அதிலும் பெரும்பாலானோர் ஹோட்டல் அல்லது உணவகம் தான் வைத்துள்ளனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் துவங்கி நடத்தி வருகிறார்.
அது அந்த ஊர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தனது உணவக கிளைகளைப் பெருக்க வேண்டி “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்று இரண்டு புதிய கிளைகளை நேற்று மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவங்கினர்.
அதை சூரியின் நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயனின் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் சூரியின் இந்த புதிய இரண்டு ஹோட்டலை . ஒரு வருடத்திற்கு 5 முதல் 8 படங்கள் வரை கொடுப்பவர் விஜய் சேதுபதி. அப்படி பிஸியாக ஷூட்டிங்கில் இருக்கும் போது கூட இப்படி நேரத்தை ஒதுக்கி சென்று நண்பனுக்காகப் பார்த்துள்ளார்.