பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது நடிகர் சரவணன் தனது அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது குறித்து சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது சொந்த ஊரான சேலம் மாட்டத்தில் உள்ள வடக்காடு கிராமத்தில் கோவில் கட்டியுள்ளார்.
விநாயகர், வீரமுனி ஆகியோரின் சிலைகளுடன் சேர்த்து போலீஸ்காரராக இருந்த தனது அப்பாவுக்கும் சிலை வைத்துள்ளார் சரவணன். அந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷன், சாண்டி, மீரா மிதுன், ரித்விகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின்போது தான் மீரா மிதுன் சரவணனுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அப்பா-அம்மா வாழ்ந்த வீட்டை விற்று நிலம் வாங்கி கோவில் கட்டியுள்ளார் சரவணன். அப்பா, அம்மா உயிரோடு இருந்தபோது தான் ஒன்னும் செய்யவில்லை. தற்போதாவது ஏதாவது செய்ய வேண்டும் என்று கோவில் கட்டியதாக சரவணன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தனது அம்மாவுக்கு கோவில் கட்டியுள்ளார். இந்நிலையில் சரவணன் அப்பாவுக்கு கோவில் கட்டியிருக்கிறார்.