தேவையானவை
#துளசி இலை- 15
#பனை வெல்லம் – தேவையான அளவு
#வறுத்து தூளாக்குவதற்கு
அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு சிறிதளவு
#கடுக்காய்த் தோல்- 2 துண்டு
#ஏலக்காய் -2
#மிளகு- அரை தேக்கரண்டி
எப்படிச் செய்வது?
*வறுத்துப் பொடித்த பொடியிலிருந்து ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். அதில் துளசி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் சிறிது நேரம் மூடி வைத்து பிறகு பனை வெல்லம் சேர்த்தால் மணக்க மணக்க மூலிகை தேநீர் தயார்.
இந்தத் தேநீர், புத்துணர்வு தரும், தொண்டைச் சளியைப் போக்கும்,மூத்திரம் நன்றாக வெளியேறும்,உடல்குளிர்ச்சி பெறும், நித்திரை உண்டாகும். எந்தவித தீங்கான கலப்படமற்ற தேநீரைப் பருகுங்கள்.