நல்லெண்ணெய் எள்ளில் இருந்து வருகிறது ஏன் நாம் எள் எண்ணெய் என்று கூறாமல் நல்லெண்ணெய் என்று கூறுகிறோம். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதால் தான் என்னவோ, நம் முன்னோர்கள் இதனை நல்லெண்ணெய் என்று அழைக்கின்றனர் போலும். இந்த நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம்.இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெயை சேர்க்க தவறாதீர்கள்.
)
1)மலச்சிக்கல் :
நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
2)கெட்ட கொழுப்பைக் கரைக்கும்:
நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து(LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.
3)உடலுக்கு குளிர்ச்சி :
உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
4)இரத்த அழுத்தம் :
நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.
5)ஆஸ்டியோபோரோசிஸ் :(என்புசிதைவு)
நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
6)மனநிலையை மேம்படுத்தும் :
நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
7)மூட்டு வலிகள் :
மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.
8)பல் வலி மற்றும் ஈறு பிரச்சனைகள்:
நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.
###வயிற்றுப்போக்கின் போது நல்லெண்ணெயின் உபயோகத்தைத் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது உடலில் நீர்வறட்சியை உண்டுபண்ணிவிடும்.###
நல்லெண்ணெய் சிறப்பு மருத்துவம் மூலம் வாய்கொப்பளித்தல்( Oil pulling)
“வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்பது பழமொழி
“வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும்” என்பது புதுமொழி.
நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக் காக்கும்.
எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் செய்யும் முறை
—————————————————————
*சுத்தமான நல்லெண்ணெய் 10 mlஅளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக் கொள்ளவும்.
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
*இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.
எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
*நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
நன்மைகள்
1.தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது.
2.கை, கால், விரல்கள் மெருகுற்று இரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும்.
3.தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும்.
4.Migraine எனப்படும் ஒற்றைத் தலைவலி தீரும். பொடுகு தொல்லை தீரும்.
5.பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.
6.பல் கூச்சம் நின்று பல்வலி மறையும்.
7.உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதை நீங்கள் உணர முடியும்.
இன்னும் சில வருடங்களில் மேலைத்தேச நாட்டவர்கள் இவ்வெண்ணெயினைப்பாவிப்பதால் உடலுக்கு பல நன்மையுண்டு என்று கூறி அவர்களே நல்லெண்ணெய் மாத்திரை, சிரப்(Tonic) என்று எங்களுக்கே அதனை அனுப்பும்போது எல்லாம் புரியும்.
உதாரணமாக உள்ளி(பூண்டு) தமிழ்வைத்தியர்கள் பாவிக்கச்சொல்லும்போது நாம் பாவிக்கத்தயங்கினோம் ஆனால் இன்று மேலைத்தேச நாட்டவர்கள் அனுப்பிய Garlic capsule(உள்ளிக்க்குளிசை) பாவிக்கிறோம். இதோபோல் பலவற்றைக் கூறலாம். அடுத்தடுத்த பதிவுகளில் தருகின்றேன்.
#எள்ளில் 20% புரதமும் ,50% எண்ணெய்யும் ,16% மாப்பொருளும் உள்ளன. பின்வரும் அட்டவணை எள் வித்தின் ஊட்டப்பொருள்களின் அளவைக் காட்டுகின்றது.
1)தோல் நீக்கப்பட்ட வறுத்த எள் வித்தின் ஊட்டப்பொருள் மதிப்பு
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல்570 kcal 2370 kJ
*மாப்பொருள் 26.04 g
– சர்க்கரை 0.48 g
– நார்ப்பொருள் (உணவு) 16.9 g
*கொழுப்பு48.00 g
*புரதம்16.96 g
*நீர்5.00 g
*உயிர்ச்சத்து
சி 0.0 mg. ,0%
கால்சியம் 131 mg. ,13%
இரும்பு 7.78 mg. ,62%
மக்னீசியம் 346 mg. ,94%
பாசுபரசு 774 mg. ,111%
பொட்டாசியம் 406 mg ,9%
சோடியம் 39 mg. ,3%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database
2)தோல் நீக்கப்பட்ட உலர்த்திய எள் வித்தின் ஊட்டப்பொருள் அளவு
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 630 kcal 2640 kJ
*மாப்பொருள் 11.73 g
– சர்க்கரை 0.48 g
– நார்ப்பொருள் (உணவு) 11.6 g
*கொழுப்பு61.21 g
*புரதம்20.45 g
*நீர்3.75 g
*உயிர்ச்சத்து
சி 0.0 mg0%
கால்சியம் 975 mg ,98%
இரும்பு 14.5 mg. ,116%
மக்னீசியம் 345 mg. ,93%
பாசுபரசு 667 mg. ,95%
பொட்டாசியம் 370 mg ,8%
சோடியம் 47 mg ,3%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database
“உணவே மருந்து”