ஜோர்டான் நாட்டில் மகளிர் கால்பந்து போட்டியின் நடந்த ஒரு உணர்வுபூர்வமான சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், இரு அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. அப்போது, தலையில் புர்கா அணிந்த பெண் தனது எதிரணியினரிடமிருந்து கால்பந்தை பறிக்க முயலும்போது, அவரது புர்கா சிறிது அவிழ்ந்து விட்டது. தலைமுடியை வேறு ஆண்கள் பார்க்காவண்ணம் இருக்க இவ்வாறு அணிவது அவர்கள் மரபு. எனவே அது அவிழ்ந்ததும் அந்த பெண் அப்படியே அந்த இடத்தில் அதை சரி செய்ய முயலுகிறார்.
உடனே எதிரணியிலிருக்கும் பெண்கள் ஆட்டத்தை அப்படியே நிறுத்திவிட்டு, அவரை சுற்றி ஒரு கேடயம் போல நின்று கொள்கிறார்கள். அவர் புர்காவை சரி செய்து முடித்ததும் மீண்டும் ஆட்டம் துவங்குகிறது.
இந்த ஒரு சிறு சம்பவம் ஒருவரின் நம்பிக்கை மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்க வேண்டிய மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது. உதவிய அணியினர் அந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், இந்த செயலுக்காகவே அனைவரது மனதிலும் இடம்பெற்றுவிட்டனர்