உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே விந்து
முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
Lidocaine Gel
இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு (மர க்கச் செய்யும்) மருந்துகள் (Topical anesthetic) உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
ஸ்பிரேயாகவும் கிடைக்கிறது
இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை (Sensitivity) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்துவிரைதலைத்
தாமதப்படுத்துகின்றன.
ஆனால் இம்மருந்தானது உணர்வை சற்று மரக்கச் செய்யக் கூடும். மருந்தை இடும் ஆணுக்கு மாத்திரமின்றி அவருடன் உறவு கொள்பவரின் உணர்வுகளையும் மந்தப்படுத்திவிடக் கூடிய பிரச்சனை இருக்கிறது. ஒரு சிலருக்கு பூசிய இடத்துத் தோலில் ஒவ்வாமை ஏற்றடவும் கூ டும்.
விசேட ஆணுறை
இதற்கு மாற்றாக ‘நீண்ட உறவு Long Love’ எனப் பெயரிடப்பட்ட
ஆணுறை மேல்நாடுகளில் அறிமுகப்பத்தப்பட்டுள்ளது. மரக்கச் செய்யும் மருந்துகளை (Benzocaine) பூச வேண்டிய தேவையில்லாமல், ஆணுறையில் உட்புறமாகக் கலந்திரு க்கிறார்கள்.
இலங்கையில் Stamina என்ற ஆணுறையை இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம்சந்தைப்படுத்தியுள்ளது.
Durex, Pasante போன்ற இன்னும் பல்வேறு பெயர்களில் வேறு நாடு களில் கிடைக்கும்.
அழுத்திப் பிடிக்கும் முறை
அமெரிக்க மருத்துவர்களான மாஸ்டர்ஸ் ஜோன்சன் அறிமுகப்
படுத்திய முறை இதுவாகும். மரு ந்து மாத்திரை, பூச்சு மருந்து எவையும் தேவையில்லை. மனைவியின ஒத்துழைப்பும் கணவனின் பங்களிப்பும் மட்டுமே தேவை. ஆயினும் சரியான முறையில் அதைப்பயில்வது அவசியம். விந்து வெளியேறவிருக்கும் தருவாயில் ஆணுறுப்பை இறுக அழுத்திப் பிடிப்பதால் தடுக்கலாம்.
உறவின்போது பெண் தனது ஒரு கையால் விறைத்திருக்கும் ஆணின் குறியைப்பற்ற வேண்டும். பெருவிரல் ஒரு பக்கத்திலும், சுட்டிவிரலும் நடுவிரல் மறுபக்கமாகவும் இருக்குமாறு பற்ற வேண்டும்.
அவ்வாறு பற்றும்போது சுட்டி விரலானது மொட்டிலுள்ள தடித்த வளையத்திற்கு முற்புறமாகவும், நடுவிரலானது மொட்டிலுள்ள தடித்த வளையத்திற்கு பின்புறமா கவும் இருக்கும்.
ஆண் தான் உச்சகட்டத்தை எட்டுவதாக உணர்ந்தவுடன் அதை பெண்ணிற்கு உடனடியாகச் சொல்ல வேண்டும்.
உடனடியாக அவள் தனது பெரு விரலாலும், ஏனைய இரண்டு விரல்களாலும் அவனது உறுப்பை இறுக்கி அழுத்த வேண்டும். வலிக்காது. ஆனால் விந்து வெளி யேறுவது தாமதப்படும். இதனைத்தான் ஸ்குயிஸ் ரெக்னிக்
(“Squeeze” technique )என்கிறோம்.
மருந்துகள்
இத்தகைய நடைமுறை சிகிச்சைகளால் பயன் இல்லையெனில்
மருத்துவரை நாடுங்கள். உடலு றவில் முந்துவதை விடவும் பிந் துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் என்பதைத் தாரக மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. திருப்பதி கொள் வதற்கு மாற்று வழிகள் உள்ளன.
இதற்கு சிகிச்சைகள் மட்டும் பயனளிப்பதில்லை. கணவன் மனைவி தம்மிடையே பிரச்சனைகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாகப் பேசி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாத அன்பான உறவு இருக்க வேண்டும்.