Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிக்கலாம்

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிக்கலாம்?

Posted on October 28, 2019 By admin No Comments on உடலின் நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிக்கலாம்?

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிக்கலாம்?

—————————————————–
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதனால் நாம் நோய் வராமல் பாதுகாக்கமுடியும். காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொள்ளாமல், சிலர் தடிமன் மற்றும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உட லில்நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர் ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:
——————————-
வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட் டமின் சி(அஸ்கோபிக் அசிட்) மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின்

இயற் கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணி களை அழிப்பதில் முக்கிய பங்குவகிக்கி ன்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
உடலின் ஆரோக்கிய ம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொரு ட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபி ன் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட்டிக் உதவுகிறது. மேலும், இவை நன் மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொ ற்றை எதிர்த்துபோராடஉதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உத வுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையு ம் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரி யா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உட லுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களு க்கு சாதகமான, வெப்ப நிலையை பராமரி க்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவு கிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்புதன்மை யை பாதிப்பதோடு, கடும் பற்றாக் குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போ க வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றா க்குறை ஏற்படாமல் பார்த்துக் கொ ள்ள வேண்டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகி றது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிக ரிக்கும் மூலிகை களை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உட லில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்ச ள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரி யாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலி ன்நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இய ற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலி ல், சாதாரணமாக வளர்க்கப் படும் பசுவின் பாலைவிட 50 சதவீதம் அதிகளவு வைட்டமி ன் இ சத்தும், 75 சதவீத ம் அதி களவு பீட்டா-கரோட்டினும் இ ருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியா சான்தைன்’ மற்றும் “லூட் டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக மாக உள்ளன. இதே போன் று, இயற்கை முறையில் வி ளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலு ம், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன.

நெல்லிக்காய், தோடம்பழம், கொய்யாப்பழம், அப்பிள், போன்றவை முக்கியமானவை.
‘உணவே மருந்து ‘

Genaral News, Health News Tags:உடலின் நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிக்கலாம்?

Post navigation

Previous Post: நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்
Next Post: மூலிகை தேநீர்

Related Posts

Psycho dedicates to the Visually Challenged - At the Mirchi Music Awards 2021* Psycho dedicates to the Visually Challenged – At the Mirchi Music Awards 2021 Genaral News
Blacksheep & SNS Group of Institution students gift world record surprise for Yuvan Shankar Raja Blacksheep & SNS Group of Institution students gift world record surprise for Yuvan Shankar Raja Genaral News
சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் Genaral News
arnatic vocalist Aruna Sairam selected for French government's top honour Chevalier Award பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் Genaral News
இந்த உலகக்கோப்பை தொடரில் சச்சின் தெண்டுல்கர் சாதனையை யாராவது முறியடிப்பார்களா?? Health News
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme