நடிகர் சிபிராஜ் தற்போது ’மாயோன்’ மற்றும் ’வால்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிபிராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி கன்னடத்தில் வெற்றி பெற்ற ’காவுல்தாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் நாயகியாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளார். மேலும் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இதனை இயக்கவுள்ளார்
