-ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்!
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்!
Image result for p chidambaram
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்துள்ள வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம் தற்போது தில்லி திகார் சிறையில் உள்ளார்!
வெளிநாடு செல்ல தடை, ரூ.ஒரு லட்சம் பிணையத் தொகை செலுத்த உத்தரவு உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப் பட்டுள்ளது என்றாலும், அவர் சிறையில் இருந்து வெளியே வருவாரா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. காரணம், அமலாக்கத்துறையின் கீழ் அவர் கைதாகி இருப்பதால் ஜாமீன் கிடைத்தாலும் ப.சிதம்பரம் வெளியே வர முடியாது என்கின்றனர்.
அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் இருப்பதால் அதுகுறித்து ஜாமீன் தாக்கல் செய்து, அதன் பின்னர்தான் இந்த வழக்கில் சிதம்பரம் ஜாமீன் பெற்று வெளியில் வருவது குறித்து யோசிக்க முடியும் என்கின்றனர்.