தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை கிரிசாயா இயக்கி இருக்கிறார். பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் துருவ் விக்ரம் பேசும்போது, ‘நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பேசியிருக்கிறேன். ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.
இந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் அவரது இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒர் பாடல் பாடியதற்காக நன்றி.
அப்பா விக்ரம் பற்றி பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும். அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை’ என்றார்