Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வயநாடு சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எது?

வயநாடு சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எது?

Posted on October 22, 2019 By admin No Comments on வயநாடு சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எது?

வா!வா! என அழைக்கும் வயநாடு… சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எது?

Wayanad weekend getaways : தமிழகத்துக்கு வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது வயநாடு எனும் மலை சூழ் பசுமை மாவட்டம். இந்த மாவட்டம் அடர்ந்த காடுகளும், பச்சை பசேலென்று படர்ந்திருக்கும் சூழ்நிலைகளையும் கொண்டது. வயநாட்டிலிருந்து வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் சென்று வர சிறந்த இடங்களாக சில இடங்கள் காணப்படுகின்றது.அதில் முக்கியமாக மீன் முட்டி நீர்வீழ்ச்சி, சூச்சிப்பாறா நீர்வீழ்ச்சி,செம்பரா சிகரம்,பானசுரா அணைக் கட்டு, காட் காட்சி முனை,முத்தங்கா காட்டுயிர் பூங்கா, என்பன ஆகும்.

கேரள மாநிலத்தில் இருக்கும் சிறந்த நீர் வீழ்ச்சிகளுள் முக்கியமான நீர்வீழ்ச்சியாகும் இது.

இந்த இடத்துக்கு மீன் முட்டி நீர்வீழ்ச்சி என்று பெயர் வரக் காரணமாக மீன்கள் பாறையில் முட்டி விளையாடுவதை சொல்லபடுகின்றது. கல்பேட்டாவிலிருந்து 25 கிமீ தொலைவிலும், சுல்தான் பத்தேரியிலிருந்து 48 கிமீ தொலைவிலும்,பானசுரா சாகர் அணையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், இது அமைந்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாத காலங்களில் நீங்கள் இங்கு செல்லலாம்.

என்னென்ன செய்வது ?

புகைப்படம் எடுப்பதற்கு ஓர் சிறந்த இடம். நீங்களும் கேமராவுடன் சென்றால் உங்களுக்கு அழகிய பல கிளிக்குகள் கிடைக்கும். நுழைவிலிருந்து அருவிக்கு டிரெக்கிங் செல்லலாம். சுமார் 2 கிமீ தூரம் டிரெக்கிங் மூலம் சென்று புகைப்படங்கள் எடுத்து மகிழலாம்

இந்த நீர் வீழ்ச்சி 200 மீ உயரம் கொண்டது. மேலும் மிகவும் அழகானது. பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும். வயநாட்டில் இருந்து கல்பேட்டா, சுன்டாலே, மேப்பாடி வழியாக எளிதில் சூச்சிப் பாறா நீர்வீழ்ச்சியை அடையலாம். இங்கு செல்வதற்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் சிறந்தது. இங்கு நீர் வீழ்ச்சி,இயற்கை காட்சி,காடுகள் என பலவற்றைக் காணலாம். அத்தோடு, நண்பர்களுடன் பயணித்து சென்று டிரெக்கிங் செய்வது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

சாகச பயணம் செல்ல விரும்புபவர்கள் வயநாட்டில் இருக்கும் செம்பரா சிகரத்திற்கு செல்லலாம். சிற்றூர் , கல்பேட்டாவிலிருந்து வெறும் 8 கிமீ துாரத்தில் தெற்கில் அமைந்துள்ளது. இதன் அருகில் தான் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீ உயரம் கொண்ட செம்பரா சிகரம் அமைந்துள்ளது. மேலும் இங்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் செல்லலாம். இங்கு இதய வடிவிலான ஏரி ஒன்றை காணலாம். செம்பரா சிகரத்தில் ஏறும்போது இயற்கை காட்சிகள் பல கண்ணில் படும். மலைஏற்றம், ஏரிகள், மலைகளின் அழகை ரசித்தல், புகைப்படங்கள் எடுத்தல் போன்ற செய்கைகளில் ஈடுபடலாம்.

இந்த அணையை கல்பேட்டா பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இங்கு சென்று பார்வையிட்டு செல்கின்றனர். காரணமனத்தோடு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது வயநாட்டிலிருந்து வாடகை வண்டி மூலம் எளிதில் இந்த அணைக் கட்டை அடைய முடியும். ஜனவரி முதல் மே வரையிலும் பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் இங்கு செல்லலாம்.

Education News, Genaral News, Health News, Political News Tags:visit-in-wayanad-on-your-next-trip-indiastarsnow (1), வயநாடு சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எது?

Post navigation

Previous Post: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு
Next Post: வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்

Related Posts

நடிகை ஜெனிபர் லோபஸ் வயது 47 இவர் 4வது திருமணம்!!!! Genaral News
பொன்னியின் செல்வன்’ பற்றி மனம் திறந்த பிரபல நடிகை  Genaral News
விஜய்64 படத்தை இயக்கப்போவது யார் ???????? Genaral News
நக்‌ஷத்ரா’ அறிமுகம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ அறிமுகம் Genaral News
சிம்பு திருமணம் எப்போது என்று எனக்கு தெரியும்???????????? Genaral News
ஜீவனின் அறிவியல் புனைவு திரில்லர் படம் அசரீரி Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme