Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகை மனிஷா கொய்ராலா மது பழக்கத்தால் மோசமான வாழ்க்கை

நடிகை மனிஷா கொய்ராலா மது பழக்கத்தால் மோசமான வாழ்க்கை

Posted on October 22, 2019 By admin No Comments on நடிகை மனிஷா கொய்ராலா மது பழக்கத்தால் மோசமான வாழ்க்கை

மது பழக்கத்தால் மோசமான வாழ்க்கை – மனிஷா கொய்ராலா

தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மனிஷா கொய்ராலா இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். மனிஷா கொய்ராலாவுக்கு 2012-ல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நைனிடாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மனிஷா கொய்ராலா கலந்து கொண்டு பேசியதாவது:-

எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த புத்தகம் எழுதினேன். என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன். புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் ஒரு நாள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன். ஒரு ரோஜா தனது நிறத்தை இழக்கப்போகிறது என்று உணர்ந்தேன். ஆரம்பத்தில் மது பழக்கம் இருந்தது. இதனால்தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. அதை புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.
நடிகை மனிஷா

Cinema News Tags:manisha koirala -indiastarsnow.com, நடிகை மனிஷா கொய்ராலா மது பழக்கத்தால் மோசமான வாழ்க்கை

Post navigation

Previous Post: Sathyabama Institute of Science and Technology ALL INDIA ENGINEERING ENTRANCE EXAMINATION – 2020
Next Post: திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

Related Posts

உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்ப இருக்கிறார். உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்பினார். Cinema News
மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு Cinema News
பாட்னர்’ பத்திரிகையாளர் சந்திப்பு Cinema News
விக்ரம் திரைவிமர்சனம் விக்ரம் திரைவிமர்சனம் Cinema News
தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம் ” P- 2 “ Cinema News
ஜவான் படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான் ஜவான் படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme