Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

Posted on October 22, 2019 By admin No Comments on திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்காதது தொடர்பாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கலெக்டரின் நடவடிக்கைகள் கைவிட வலியுறுத்தியும், பிடிஓக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வாட்ஸ்அப் குழுவில் ஆடியோ பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிடிஓ அலுவலகங்களில் பணிபுரியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.2 நாளில் 2000 பேருக்கு ஒதுக்கீடு: இதற்கிடையே திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்ட எச்சரிக்கை எதிரொலியாக, இரண்டு நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு வீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடித்துள்ளனர். அதையொட்டி, அதிகாரிகளுக்கு கலெக்டர் ‘வாழ்த்து மெசேஜ்’ அனுப்பியுள்ளார்.

Genaral News Tags:திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

Post navigation

Previous Post: நடிகை மனிஷா கொய்ராலா மது பழக்கத்தால் மோசமான வாழ்க்கை
Next Post: விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றம் பூத் பணம் பங்கிடுவதில் பிரச்னை

Related Posts

Worldline to hire best Engineering talents from Chennai Genaral News
மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு? Genaral News
Lady Finger Lady Finger-www.indiastarsnow.com கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் !! Genaral News
The Indian Express Bigg Boss Tamil பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும்? – எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ Genaral News
இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை Genaral News
கலாம்  சலாம் - மெய்நிகர் அஞ்சலி-indastarsnow.com கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme