சென்னையில், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன.காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில், 50க்கும் மேற்பட்டோர், தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 2,000க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஓர் இடத்தில், ‘ஏடிஸ்’ கொசு உற்பத்தியானால், அது, சுற்றியுள்ள, 2 கி.மீ., துாரம் வரை, டெங்கு காய்ச்சலை பரப்பும். இதை தடுக்கும் வகையில், ‘ஏடிஸ்’ கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசுப் புழுக்களை அழிப்பதுடன், கொசுப் புழு உருவாகும் வகையில், சுகாதாரமின்றி வளாகத்தை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் இதுவரை, 50 லட்சம் ரூபாய்க்கு மேல், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொசு வளர காரணமாக இருக்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, சென்னை மாநகராட்சி திருத்தி அமைத்துள்ளது. இதில், கடந்த காலங்களில், குடியிருப்புகளுக்கு, 500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட அபராத தொகை, தற்போது, 200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு கட்டடங்களுக்கான அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.புதிய அபராத தொகை