Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்

சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்

Posted on October 22, 2019 By admin No Comments on சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்

சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க மொபைல் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது மக்களின் மனம் கவர்ந்தவற்றுள் ஒன்று பட்டாசு. பட்டாசு தயாரிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. பட்டாசு தயாரிக்கப்படும் மருந்தில் கலக்கப்படும் பேரியம் உள்ளிட்ட ரசாயன அளவை குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பசுமை பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளன.
இந்தியாவில் ஏற்கனவே சீனப் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனப் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், அதிகப்படியான வண்ணங்களுக்கு ரசாயனம் கலக்கப்படுவதாகவும், இது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்றும் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 22) மத்திய சுங்கத் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தடை விதிக்கப்பட்டுள்ள சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்து, இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யக் கூடாது. சட்ட விரோதமாகச் சீனப் பட்டாசுகள், வாங்குதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது சுங்கத்துறை சட்டம் 1962ன் கீழ் குற்றமாகும். சீனப் பட்டாசுகள் வாங்குவது உள்நாட்டுப் பட்டாசு தொழில் மற்றும் வணிகத் துறைக்கு எதிராகும். எனவே ஆபத்தை ஏற்படுத்தும் சீனப் பட்டாசுகள் வாங்குவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Genaral News Tags:சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்

Post navigation

Previous Post: விஜய்யின் பிகில் வருமான வரித்துறை. அடுத்த செக்?
Next Post: சமூக வலைதளங்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது

Related Posts

vinayakar idol immersion-www.indiastarsnow.com சென்னையில்வி 2 ஆயிரத்து 300 நாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட உள்ளன Genaral News
அண்ணே... அண்ணே.. அழகிரி அண்ணே... மதுரையை கலக்கும் போஸ்டர் அண்ணே… அண்ணே.. அழகிரி அண்ணே… மதுரையை கலக்கும் போஸ்டர் Genaral News
தமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! Genaral News
Homegrown Company K7 Computing Ranks No.1 Globally Homegrown Company K7 Computing Ranks No.1 Globally in Performance Test by AV Comparatives Genaral News
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமடைய தொடங்கி உள்ளது. Genaral News
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme